முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சையத் மோடி பேட்மிண்டன்: பி.வி.சிந்து, பிரனோய், மிதுன் காலிறுதிக்கு தகுதி

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லக்னோ: சையத் மோடி பேட்மிண்டன், ஆடவர் ஒற்றையர் பிரிவில் மிதுன் மஞ்சுநாத் காலிறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் செர்கியுடன் மோதுகிறார்.

லக்னோவில்... 

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில் இரணடு முறை பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து மற்றும் பிரனோய் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காலிறுதிக்கு... 

மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2ம் சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து அமெரிக்காவின் லாரன் லாமை 21-16 21-13 என்ற நேர்செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரனோய், சக வீரர் பிரியன்ஷூ ரஜாவத்தை 21-11 16-21 21-18 என்ற செட்கணக்கில் தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தார். காலிறுதியில் பி.வி.சிந்து தாய்லாந்து வீராங்கனை சுபனிதாவை எதிர்கொள்கிறார். பிரனோய், காலிறுதியில் பிரான்ஸ் வீரர் அர்னாட் மெர்க்லேவுடன் மோத உள்ளார்.

மிதுன் மஞ்சுநாத்...

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஆகார்ஷி காஷ்யப்-மாளவிகா பன்சோட் ஆகியோர் விளையாடுகின்றனர். இதேபோல் சமியா இமாத் பரூக்கி, அனுபமா உபாத்யாயா ஆகியோரும் காலிறுதியில் மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொருத்தவரை மிதுன் மஞ்சுநாத்தும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். அவர் இனி ரஷிய வீரர் செர்கியுடன் மோதுகிறார். இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அர்ஜூன்-துருவ் கபிலா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து