எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கோலியை, ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பி.சி.சி.ஐ நீக்கி, ரோஹித் சர்மாவை நியமித்தது. தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தபின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி திடீரென விலகினார். விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது கிரிக்கெட்ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளி்த்த பேட்டியில் கோலி குறித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது., இன்றுள்ள நவீன கால கிரிக்கெட் வீரரான விராட் கோலியைப் பற்றி விமர்சிப்பவர்கள் என்னைப் பொறுத்தவரை முட்டாள்கள். ஏனென்றால், இதுபோன்ற பயோ-பபுள் சூழலில் இருந்து கொண்டு விளையாடுவது கடினம். ஆதலால், கோலியின் முடிவை விமர்சிப்பதும், அவரை விமர்சிப்பது நியாயமற்றது. கோலி அனைத்துப் பிரிவிலும் கேப்டன் பதவியிலிருந்து விலகியது எனக்கு பெரிய வியப்பை அளிக்கவில்லை. இவ்வாறு பீட்டர்ஸன் தெரிவித்தார்.
ஹர்பஜன் சிங்குக்கு கொரோனா உறுதி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (வயது 41). இதுவரை 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 28 சர்வதேச இருபது ஓவர் போட்டிகள் என மொத்தம் 367 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மொத்தம், 711 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 3,569 ரன்களை எடுத்து உள்ளார். இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 417 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், 32.46 சராசரியும் வைத்துள்ளார். இறுதியாக கடந்த 2016ம் ஆண்டு இருபது ஓவர் ஆசிய கோப்பையில் விளையாடிய அவர், அதன்பின்பு அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பரில் தனது ஓய்வு அறிவிப்பினையும் அவர் வெளியிட்டார். இந்நிலையில், ஹர்பஜன் சிங்குக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி அவரது டுவிட்டர் பதிவில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். பாதுகாப்புடன் இருங்கள். கவனமுடன் இருங்கள் என தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, எம்மா தோல்வி
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் போட்டியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 4-6, 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ஜப்பானின் டாரோ டேனியலிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் அர்ஜென்டினா வீரர் ஸ்வார்ட்ஸ்மான் 6-7 (6-8), 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் கொன்னலிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.
பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சரிவில் இருந்து மீண்டு வந்து 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் ஸின்யு வாங்கை சாய்த்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தவரான இங்கிலாந்தின் இளம் புயல் எம்மா எடுகானு 4-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் 98-ம் நிலை வீராங்கனையான டான்கா கோவினிச்சிடம் (மான்ட்னெக்ரோ) வீழ்ந்து நடையை கட்டினார்.
அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் ?
எதிர்வரும் ஐபிஎல் 2022 சீசனில் பத்து அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் நாளை (ஜனவரி 22) தங்கள் அணி சார்பில் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரத்தை ஐபிஎல் நிர்வாகக் குழுவிடம் சமர்பிக்க உள்ளன.
இந்நிலையில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை அந்த அணியின் நிர்வாகம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பாண்ட்யா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். உள்ளூர் மக்களை ஈர்க்கும் வகையில் இதனை அகமதாபாத் அணி செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. பாண்ட்யா மட்டுமல்லாது சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஷூப்னம் கில்லை அகமதாபாத் அணி தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. அது தொடர்பான விவரம் இன்று உறுதியாக தெரிந்துவிடும்.
ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து: இந்தியா - ஈரான் போட்டி `டிரா’
20வது ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் தொடங்கியது. இதில் 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடக்கிறது. நேற்று ஏ பிரிவில் முதல் போட்டியில் சீனா- சீன தைபே மோதின. இதில் 4-0 என்ற கோல் கணக்கில் சீனா வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-ஈரான் மோதின.
இந்த ஆட்டத்தில் கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 0-0 என ஆட்டம் சமனில் முடிந்தது. இந்தியா அடுத்த ஆட்டத்தில் சீன தைபேயை வரும் 23ம் தேதி சந்திக்கிறது. இன்று ஜப்பான்-மியான்மர், ஆஸ்திரேலியா-இந்தோனேசியா, தாய்லாந்து-பிலிப்பைன்ஸ், வியட்நாம்-தென்கொரியா மோதுகின்றன.
ஆஸி. ஓபன் இரட்டையர்: சானியா ஜோடி முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்வியாடெக் (போலந்து), மெர்டென்ஸ் (பெல்ஜியம்), டாரியா கசட்கினா (ரஷியா), மேடிசன் இங்லிஸ் (ஆஸ்திரேலியா), பாவ்லிசென்கோவா (ரஷியா), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), வான்ட்ரோசோவா (செக்குடியரசு) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)-ராஜீவ் ராம் (அமெரிக்கா) இணை 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் செர்பியாவின் அலெக்சாண்ட்ரா குனிச்- நிகோலா காசிச் ஜோடியை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
17 Jul 2025புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: ராமதாஸ் உறுதி
17 Jul 2025விழுப்புரம், ''ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
வரிவிதிப்பு முறைகேடு விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு: ஐகோர்ட்டு கிளை
17 Jul 2025மதுரை, மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
-
ஈராக்; வணிக வளாகத்தில் தீவிபத்து: 60 பேர் உயிரிழப்பு - பலர் படு காயம்
17 Jul 2025பாக்தாத், ஈராக்கில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
-
ராகுலின் ரேபரேலி பயணம் ரத்து
17 Jul 2025ரேபரேலி, ரேபரேலி பயணத்தை ராகுல்காந்தி ரத்து செய்தார்.
-
பாகிஸ்தானில் கனமழைக்கு 124 பேர் பலி
17 Jul 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கனமழைக்கு இதுவரை 124 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
17 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
-
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்
17 Jul 2025வாஷிங்டன், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.