முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

உக்ரைன் நாட்டின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களில் சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேட்டோ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விரும்புகிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த இணைப்பிற்கு ஆதரவளித்து வருகின்றன.  இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, உக்ரைன் எல்லையில் ஒன்றரை லட்சம் ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது.

இதையடுத்து, உக்ரைனில் ரஷ்ய படைகள் சிறிதளவு நுழைந்தால் கூட அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கையை அமெரிக்கா முடிவு செய்யும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். 

உக்ரைன் சிறிய நாடு என்பதால் சிறிதளவு ரஷ்ய படை நுழைவதை பொறுத்துக் கொள்ள முடியுமா? என, ஐரோப்பிய தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தினர் சிலர் நுழைந்தால் கூட, அதை படையெடுப்பாக கருதி ரஷ்யா மீது கடுமையான பொருாளதார தடை விதிக்கப்படும் என, அமெரிக்க வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது. 

இதற்கிடையே உக்ரைன் எல்லைக்குள் ராணுவத்தை அனுப்பாமல் சைபர் தாக்குதல் எனப்படும் கணினி ஒருங்கிணைப்பில் நாசகர நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து