முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ், சின்னர், ஹாலெப், கோலின்ஸ் 4வது சுற்றுக்கு தகுதி

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஹாலெப், கோலின்ஸ் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெத்வதேவ், சின்னர் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சிமோனா ஹாலெப்... 

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. 3-வது வரிசையில் உள்ள ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹாலெப் நேற்று காலை நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் மாண்டர்கோ நாட்டை சேர்ந்த டாங்காகோவிநிச்சை எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.அவர் 4-வது சுற்றில் பிரான்சை சேர்ந்த அலிசிகோர்நெட்டை எதிர்கொள்கிறார். கோர்நெட் 3-வது சுற்றில் 4-6, 6-4, 6-2 என்ற கணக்கில் தமரா ஷிடன்செக்கை (சுலோவேனியா) வீழ்த்தினார்.

அமெரிக்க வீராங்கனை...

27-வது வரிசையில் உள்ள கோலின்ஸ் (அமெரிக்கா) 4-6, 6-4, 7-5 என்ற கணக்கில் கிளாராவை (டென்மார்க்) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதிபெற்றார். மற்ற ஆட்டங்களில் 19-வது வரிசையில் உள்ள மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கனேபி (எஸ்டோனியா) ஆகியோர் வெற்றிபெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

மெத்வதேவ் வெற்றி...

இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் நெதர்லாந்தின் வான் டே சான்ட்சல்புடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.  இதேபோல், மற்றொரு போட்டியில் இத்தாலி வீரர் ஜானி சின்னர் ஜப்பானின் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் சின்னர் 6-4, 1-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து