முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலிக்கு நோட்டீஸா ? பி.சி.சி.ஐ தலைவர் மறுப்பு

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. கேப்டன் பதவி விவகாரத்தில் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் இருப்பதாக தகவல் பரவியது. இதனிடையே டி20 கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் கூறியதாக கங்குலி கூறினார். ஆனால் தம்மிடம் அப்படி யாரும் கூறவில்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி கூறினார். . 

இந்நிலையில் இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் விராட் கோலி அறிவித்தார். இந்நிலையில்  விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்பவிருந்ததாக வெளியான தகவல்கள் உண்மையல்ல என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்  கேப்டன் பதவி குறித்த கருத்துக்கு விளக்கம் அளிக்குமாறு கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில் கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாழ்த்திய மும்பை அணி

ஐ.பி.எல். 2022 சீசனில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் முதலில் இருந்து ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ஒவ்வொரு அணிகளும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். மற்ற வீரர்களை வெளியேற்றி பொது ஏலம் மூலம் எடுக்க வேண்டும். அதன்படி நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யா அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்காக அந்த அணி 15 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ஒரே குடும்பமாக விளையாடி வந்தார்கள். தற்போது அந்த குடும்பத்தில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். இருந்தாலும், ‘குட் லக்’ என மும்பை இந்தியன்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், உங்களை மறுபக்கத்தில் சந்திப்போம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

இந்திய அணியில் மாற்றம் செய்ய வேண்டும் - காம்பீர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடைசி ஒருநாள் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் காம்பீர் கூறியதாவது:-

பும்ரா, புவனேஸ்வர் குமார், அஸ்வின் ஆகியோருக்கு அடுத்த போட்டியில் ஓய்வு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு இந்திய வீரர் ரிஷப் புகழாரம்

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டி நிறைவுக்கு பின்னர் பேட்டியளித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தெரிவித்திருப்பதாவது., கடந்த போட்டியில் நாங்கள் சேஸ் செய்தோம், இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம், எனவே அவர்கள் பேட்டிங் செய்யும் போது, ​​ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சிறப்பாக இருந்தது.  

அவர்கள் மிடில் ஓவர்களில் நன்றாக பேட்டிங் செய்தார்கள் அதனால்தான் அவர்கள் இலக்கைத் துரத்தினார்கள். மிடில் ஓவர்களில் எங்களுக்கு போதுமான விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. அவர்கள் (தென்ஆப்பிரிக்க ஸ்பின்னர்கள்) சீரான முறையில் பந்து வீசினார்கள் என்று நான் நினைக்கிறேன், மேலும் அவர்கள் ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடுவதற்குப் பழகிவிட்டனர் என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் பிரிவினை: பாக். வீரர் டேனிஷ் கனேரியா

இந்திய கிரிக்கெட் அணி டிரஸ்ஸிங் ரூமில் இரண்டு குழுக்களாக பிரிந்திருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா. இந்த குற்றச்சாட்டை விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து முன்வைத்துள்ளார் அவர். இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது அணி இரண்டாக பிளவுப்பட்டு இருப்பதாக ஊகங்களின் அடிப்படையில் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிப்பது உண்டு. அந்த வகையில் டேனிஷ் கனேரியாவும் இதனை சொல்லியுள்ளார். 

“இந்திய அணி இரண்டாக பிரிந்திருப்பதை போல தெரிகிறது. அது கோலி மற்றும் ராகுலாக இருக்கலாம். ஆனால் இதனை கோலி விரும்பமாட்டார். ஏனெனில் அவர் அணியாக இணைந்து விளையாடவே அதிகம் விரும்புபவர். அதனால் நிச்சயம் வலுவாக கம்பேக் கொடுப்பார். டெஸ்ட் தொடரை இழந்த பிறகு இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்போடு களம் இறங்கியது. ஆனால் கேப்டன் ராகுலிடம் ஸ்பார்க் இல்லை. தென்னாப்பிரிக்க அணியின் பார்ட்னர்ஷிப்பை தனது பவுலர்களை வைத்து அவரால் தகர்க்க முடியவில்லை” என  தனது யூடியூப் சேனலில் சொல்லி உள்ளார் அவர். 

ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி  படைத்த மோசமான சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ஆர்வலர்கள் கடந்த 2019 முதலே எதிர்பார்த்துள்ளனர். ஆனால் ‘ரன்-மெஷின்’ என அழைக்கப்படும் கோலியால் ஏனோ அதை செய்ய முடியவில்லை. இத்தகைய சூழலில் ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்துள்ளார் அவர். 

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ‘டக்’ அவுட்டானதால் அது நடந்துள்ளது. இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பேட்ஸ்மேன்களில் 14 முறை டக் அவுட்டான வீரர்களின் வரிசையில் இணைந்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சேவாக், ரெய்னா மற்றும் ஜாகீர் கான் 14 முறை டக் அவுட்டாகி உள்ளனர்.  இந்திய அணிக்காக விளையாட ஒருநாள் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான வீரர்களில் பட்டியலில் ஹர்பஜன் சிங் (17), கங்குலி (16) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் 13 முறை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் டக் அவுட்டாகி உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து