முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் கடுமையான நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

பீஜிங் : சீனாவில் கடுமையான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டு உள்ளது.

சீனாவின் வடமேற்கே குயிங்காய் மாகாணத்தில் டெலிங்கா நகரில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதுவரை, பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.  கடந்த 12 -ந் தேதி சீனாவின் வடமேற்கே குயிங்காய் மாகாணத்தில் மென்யுவான் கவுன்டி பகுதியில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த ஒரு மாதத்தில் அதே மாகாணத்தில் 2 - வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து