முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் நீ முடிவும் நீ விமர்சனம்

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

பள்ளி மாணவர்கள், பள்ளிப்படிப்பை முடித்து சில ஆண்டுகளுக்குப் பின் அனைவரும் ஒன்றாக சந்திக்க நேரும் போது அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைச் சொல்லும் படம் தான் முதல் நீ முடிவும் நீ. இதில் நடித்துள்ள அனைவரும் புது முகங்களே. பதினோராம் வகுப்பு மாணவர்களான கிஷன் தாஸ்,  மீதா ரகுநாத் இருவரும் காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் சண்டையிட்டு பிரிகிறார்கள். இதை சரி செய்ய காதல் கடவுளான தர்புகா சிவா வருகிறார். இவரது வருகையில் பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இவர்களுடன் படித்த மாணவர்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன? என்பதை கலகலப்பாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் விவரித்துள்ளது 'முதல் நீ முடிவும் நீ' படம். 90களின் காலகட்டத்தில் பள்ளி பருவ நாட்களை அப்படியே கண் முன் கொண்டு வந்துள்ளார் இயக்குநர். தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை உணர்ச்சி பூர்வமாக அமைந்து படத்துக்கு வலு சேர்த்துள்ளது. சுஜித் சாரங்க ஒளிப்பதிவில் 90ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இடையே நடக்கும் சேட்டைகள், காதல், நட்பு, சோகம், கொண்டாட்டம் என அத்தனை உணர்ச்சிகளையும் சரியான கலவையில், சரியான விகிதத்தில் உணர்ச்சிபொங்க ரசிக்கும்படி உருவிகியுள்ளது இப்படம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து