முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தராகண்ட் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

உத்தராகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. முன்னணி ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பா.ஜ.க, காங்கிரஸ் சமபலத்துடன் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் சில ஊடகங்கள், பா.ஜ.க சற்று முன்னிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளன. 

இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க சார்பில் 59 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் சார்பில் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 53 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதேபோல பா.ஜ.கவில் இருந்து காங்கிரஸுக்கு மாறிய முன்னாள் அமைச்சர் ஹாரக் சிங் ராவத்தின் பெயரும் பட்டியலில் இல்லை. பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்பால் ஆர்யா மற்றும் அவரது மகன் சஞ்சீவ் ஆர்யா எம்எல்ஏ ஆகியோர் அண்மையில் காங்கிரஸில் இணைந்தனர். இருவரும் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து