முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் வெற்றி திருமணம்: முதல்வர் நேரில் வாழ்த்து

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

கடந்தவாரம் திருமணம் செய்துகொண்ட நடிகர் வெற்றியின் வீட்டிற்கே சென்று வாழ்த்தியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானர் வெற்றி. இவரது நடிப்பில் ‘ஜீவி’, ‘வனம்’ உள்ளிட்டப் படங்கள் வெளிவந்து பாராட்டுகளைக் குவித்திருந்தாலும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியான ‘கேர் ஆஃப் காதல்’ பலரின் ஃபேவரிட் படமாக உள்ளத்தை நெகிழ வைத்துக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், தற்போது ‘பம்பர்’ படத்தில் நடித்துவரும் வெற்றிக்கும் பிரியா என்பவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா ஊரடங்கால் எளிமையாக திருநெல்வேலியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதால் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து