எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், பொதுப் பிரிவினருக்குக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கலந்து கொள்ளலாம் என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.
கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, எம்.டி., எம்.எஸ்., போன்ற மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடும், 30 சதவீதம் ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படும் என கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர் பார்க்கவியான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள முதுகலை மருத்துவப் படிப்பில் 1968 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீதம் அகில இந்திய இட ஒதுக்கீடுக்கு சென்றுவிடுகிறது. மீதமுள்ள 969 இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவதால் மீதமுள்ள 50 சதவீத இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது.எனவே, அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு அல்லது ஊக்க மதிப்பெண் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு சலுகையை மட்டும் வழங்க வேண்டுமென்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு மற்றும் அரசு மருத்துவர் சார்பில், ஊக்க மதிப்பெண்ணை தகுதியாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள் மற்றும் அணுக முடியாத பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவதாக வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு இரண்டு சலுகைகளும் வழங்க எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்க தடை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் பார்க்கவியான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபத்யாய் மற்றும் சத்திக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்குக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கலந்து கொள்ளலாம் என்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்ததுள்ளனர்.
மேலும், நடப்பு கல்வியாண்டில் இந்த இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண்கள் நடைமுறையை பின்பற்ற வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர். இட ஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தமிழக அரசு முடிவை எதிர்த்து எதிர்காலத்தில் வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் அறிவுறுத்தி உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


