முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சில நேரங்களில் சில மனிதர்கள் விமர்சனம்

திங்கட்கிழமை, 31 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

வாழ்க்கைப் பயணத்தின் போது சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் மொத்த வாழ்வையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவர்களாக அமைந்துவிடுவார்கள் என்பதைச் சொல்லும் படம் தான் சில நேரங்களில் சில மனிதர்கள். நாசரை முக்கிய பாத்திரமாக வைத்து ஒரு தெளிந்த நீரோடையின் ஓட்டம் போலச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர் விஷால் வெங்கட். நாசர் நுட்பமான உடல் மொழியுடன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் வாழ்க்கையை எப்படி அணுகவேண்டும்? என்பதற்கான பாடங்கள். படத்தின் வசனங்களை எழுதியிருப்பதோடு முக்கிய வேடத்திலும் நடித்திருக்கும் மணிகண்டன். இளவரசு, பானுப்பிரியா, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரின் அனுபவ நடிப்பு அருமை. கே.மெய்யேந்திரனின் ஒளிப்பதிவும், ரதனின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. இன்றைய இளம்தலைமுறையினர் அவசியம் பார்க்கவேண்டிய படம் சில நேரங்களில் சில மனிதர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து