முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சண்டைக்காட்சிகளில் அசத்தும் வலிமை நாயகி

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படம் இந்த வாரம் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வில்லன் கார்த்திகேயா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,வலிமை பட வாய்ப்பு கிடைத்தபோது தமிழில் அறிமுகமாக நமக்கு ஒரு வாய்ப்பு என்று மட்டும்தான் நினைத்தேன். ஆனால், அஜித்தை சந்தித்த பிறகு வெறும் தமிழ் சினிமா வாய்ப்பு என்பதைத் தாண்டி வாழ்நாள் முழுவதும் எனக்கு தேவையானவற்றை கற்றுகொள்ளவதற்கான வாய்ப்பாக இந்தப் படம் அமைந்துவிட்டது என்றார். அஜித் அமர்ந்து  பேசும்போது நமக்கு மிகவும் மரியாதையும் முக்கியத்துவமும் கொடுப்பார். அவர் அப்படிச் செய்யும்போது நம்மை அறியாமலேயே வேலையை இன்னும் சிறப்பாகச் செய்வோம். அஜித் சாரிடம் இருந்து கற்ற இந்த ஒரு விஷயத்தை வாழ்நாள் முழுவதும் நான் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். அவருடைய படங்கள், அவருடைய நடிப்பு என்பதைத் தாண்டி தனிநபராகவும் அஜித் சாரை நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது". இவ்வாறு நடிகர் கார்த்திகேயா தெரிவித்தார். காலா படத்தில், ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக அறிமுகமான ஹுமா குரேஷி தற்போது, அஜித்துக்கு ஜோடியாக 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு நிகராக இவர் செய்துள்ள சண்டை காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து