எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளிக்கிறது. நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு தீர்ப்பை இன்று அறிவிக்கிறது.
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற அமர்வில் அறநிலையத் துறை மற்றும் தர்கா நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வைத்த வாதத்தில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்களை ராம. ரவிக்குமார் தாக்கல் செய்யவில்லை என்றார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் இல்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
கடந்த 1920-ம் ஆண்டில் மலையை ஆய்வு செய்த நீதிபதி, அங்கு தூண் இருந்திருந்தால் அதுபற்றி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பார். ஆனால் அவர் எதுவும் குறிப்பிடவில்லை. கோயிலின் வழக்கமான நிகழ்வுகளை விதிமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு கோவில் நிர்வாகத்துக்கு முழு உரிமை உள்ளது. இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் நடத்தி இருக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றித்தான் தீபம் ஏற்றப்படுகிறது.
பூஜை விதிகள், அர்ச்சனை முறைகள், வழிபாட்டு உரிமைகள் என அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படுகின்றன. எனவே, தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் தீபம் ஏற்றுவதற்கானதாக இருந்தாலும் அல்லது சொத்துரிமைக்கானதாக இருந்தாலும் கோயில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்வியின்படி, இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்புடையதா என்ற கேள்வி எழுகிறது.
தனிநபர் கோவிலின் இடத்தில் ‘இங்கேதான் தீபம் ஏற்ற வேண்டும்’ என சொந்தம் கொண்டாட முடியுமா? இது சரியாக இருக்குமானால், அரசு சொத்தில் தனிநபர் உரிமை கோர இயலுமா? என்று வாதிட்டார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


