முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட தேனி மாவட்ட அ.தி.மு.க.வினர் 33 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். நடவடிக்கை

சனிக்கிழமை, 5 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வுக்கும் சுயேச்சைகளும் ஆதரவாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதனால் ஒரு சில இடங்களில் அ.தி.மு.க. ஆதரவுடன் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன், எஸ். தனலட்சுமி, ஆர். தங்க ராஜ், டி. கருப்பசாமி, எம். முருகன், எஸ். நவீன்குமார், எஸ். அருண்மொழி, செல்வ லட்சுமி அன்பழகன், கருப்பாணி, சாலைக்கரை முத்தையா, ஏ. தனபால், ஏ. ஜெயராமன், பெருமாள், எஸ். காதர், எஸ். சரவணன், கே. போகராஜ், எம். கோடீஸ்வன், எஸ். சின்னகாளை, ஆர். ஜெயப்பிரகாஷ், எஸ். முத்தையா, பி. சீனிநாயுடு, ஆர். விமல் ராஜ் ஆகியோர் இன்று(நேற்று) முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இதேபோல தேனி மாவட்டத்தை சேர்ந்த எம்.பி. ராமர், சேரலாதன் உள்பட 33 பேர் அவரது அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.  அவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து