முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: ரூ.5 முதல் ரூ.85 வரை அதிகரிக்கும்

புதன்கிழமை, 30 மார்ச் 2022      இந்தியா
Image Unavailable

சமையல் எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத்தொடர்ந்து, தற்போது அடுத்த கட்டண உயர்வை மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. வரும் 1-ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

இந்த உத்தரவின்படி, சென்னையில் புறநகர்ப் பகுதிகளான வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்தபப்ட்ட சுங்கச்சாவடி கட்டணம் நடைமுறைக்கு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.85 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.45 முதல் உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 8 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதைக் கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பின்படி, பஞ்சாபில் பாட்டியாலா மற்றும் சங்ரூர் சுங்கச்சாவடிகளில் தற்போதைய கட்டணத்தை விட 10 முதல் 18 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியது வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து