முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் அதிபராக இருந்தால் ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன்: டிரம்ப்

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2022      உலகம்
Trump 2022 26

Source: provided

வாஷிங்டன் : ஜோபைடனுக்கு பதிலாக நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 61 நாளாகிறது. ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.  இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தற்போது ஜோபைடனுக்கு பதிலாக நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடிக்கடி அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை விடுக்காத வண்ணம் செய்திருப்பேன் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து