முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. தலைவர் வருகையின் போது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல் கீவ் : ஐ.நா. தலைவர் கீவ் நகருக்கு வந்த போது ரஷ்ய படைகள் ராக்கெட் தாக்குதலை நடத்தியதில் 10 பேர் காயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2022      உலகம்
i na-kayam-2022-04-29

Source: provided

உக்ரைன் மீது ரஷ்யா 2 மாதங்களுக்கும் மேலாக தாக்குதலை தொடுத்து போரில் ஈடுபட்டு வருகிறது.

  போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து விட்டு ஐ.நா. சபை பொது செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ் உக்ரைன் சென்றார்.

அவர் புச்சா நகரில் ஏராளமானோரை கொன்று புதைத்துள்ள புதைகுழிகளை பார்வையிட்டு வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக சர்வதேச கிரிமினல் கோர்ட்டு விசாரணை நடத்துவதற்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், ரஷ்யா இதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா முடிவு எடுக்கிற வரையில் போர் முடிந்து விடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் நகரின் மைய பகுதியில் ரஷ்யாவின் ஏவுகணைகள் வான்வழி தாக்குதலை தொடுத்தன. நேற்று முன்தினம் மாலை 5.15 மணியளவில் நடந்த இந்த தாக்குதலால் ஐ.நா. தலைவரும், அவரது குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். 25 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலால் 2 தளங்கள் சேதமடைந்தன. 

கட்டிடத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து, கரும்புகை வான்வரை சென்றது.  தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர்.  இது பற்றி ஐ.நா.வின் மனிதநேய அலுவலகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி சவியானோ ஆப்ரூ செய்தியாளர்களிடம் கூறும் போது, அது ஒரு போர் மண்டலம்.  ஆனால், எங்களுக்கு மிக அருகில் தாக்குதல் நடந்தது அதிர்ச்சி அளித்தது என கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து