முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானின் மசூதியில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      உலகம்
Afghanistan 2022-04-30

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தானின் மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள கலிபா ஷகிப் மசூதியில் ஏராளமானோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மசூதியில் பயங்கர குண்டு வெடித்தது. தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் ரத்த வெள்ளத்தில் சிதறினர்.

இந்த குண்டு வெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து கீழே கிடந்தனர். அவர்களை மீட்ட காவல்துறையினர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  

இதுகுறித்து மசூதியின் தலைவர் சையத் பசில் கூறும் போது, தொழுகையின் போது எங்களுடன் தற்கொலை தாக்குதல் நடத்தும் நபர் இணைந்ததாகவும், குண்டை வெடிக்க செய்ததாகவும் கூறினார். சன்னி பிரிவினர் வழிபாடு நடத்தும் மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. 

இதுதொடர்பாக தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் முஜாஹித் கூறும் போது, மசூதியில் நடந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என கூறினார்.  இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து