முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவிக்காலம் நிறைவு: டெல்லி போர் நினைவிடத்தில் ஓய்வு பெற்ற தலைமை தளபதி நரவானே மலர் மரியாதை

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      இந்தியா
Naravane 2022-04-30

Source: provided

புது டெல்லி : இந்திய ராணுவ தலைமை தளபதியாக எம். முகுந்த் நரவானே பதவி வகித்து வருகிறார்.  அவரது பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகள் மற்றும் 28 மாதங்களாக இந்திய ராணுவத்தில் அவர் பணியாற்றி உள்ளார். 

நாட்டின் 27-வது ராணுவ தலைமை தளபதியான முகுந்த் நரவானே தனது ஓய்வை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்திற்கு நேற்று நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ராணுவ தலைமை தளபதி நேற்று ஓய்வு பெற்ற சூழலில் அவருக்கு டெல்லி தெற்கு பிளாக் பகுதியில் ராணுவ அணிவகுப்பு மரியாதை நேற்று வழங்கப்பட்டது.  அதனை அவர் ஏற்று கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!