முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேச பாதுகாப்பு சவால்களை முப்படைகள் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ளும் புதிய ராணுவ தலைமை தளபதி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      இந்தியா
Manoj-Pandey 2022-05-01

Source: provided

புது டெல்லி தேச பாதுகாப்பு சவால்களை முப்படைகள் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ளும் என்று புதிதாக பொறுப்பேற்ற ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பேட்டியில் நேற்று தெரிவித்தார். 

இந்திய ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியான எம்.எம். நரவனே நேற்று முன்தினத்துடன் ஓய்வு பெற்றார்.  இதனால் அந்த பதவிக்கு, ராணுவ துணை தலைமை தளபதியான மனோஜ் பாண்டே பொறுப்பேற்று கொண்டார்.  நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற பாண்டேவுக்கு டெல்லியின் தெற்கு பிளாக் பகுதியில் நேற்று ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.  அதனை ஏற்று கொண்ட அவர் வீரர்களை பாராட்டி பேசினார். இதன் பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 

தேச பாதுகாப்பு சவால்கள் மற்றும் மோதல் சூழ்நிலைகளை கடற்படை மற்றும் விமான படை ஆகிய மற்ற இரு படைகளுடன் ஒன்றாக இணைந்து ராணுவம் எதிர்கொள்ளும். ஆயுத படைகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே எனது நோக்கம். இந்திய ராணுவத்தின் அனைத்து அதிகாரிகளும் வெவ்வேறு ஆயுத மற்றும் சேவை பணியில் இருந்து வந்த போதும், பணி மற்றும் தொழில் சார்ந்த வளர்ச்சியில் சம வாய்ப்பினை பெறுகிறார்கள்.  மூத்த தலைமைத்துவ பதவிகளில் உள்ள அனைத்து அதிகாரிகளும் அனைத்து வகையிலான போர்புரிவதிலும் பயிற்சி பெற்றவர்கள் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!