முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முயற்சி: அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      இந்தியா
Cylinder 2022-05-01

Source: provided

புனே : சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா போா் காரணமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை கிடு, கிடு வென உயர்ந்து உள்ளது. குறிப்பாக சூரிய காந்தி எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து உள்ளது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்.   இது குறித்து அவர் மராட்டிய மாநிலம் புனேயில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சமையல் எண்ணெயை அரசு வெளிநாடுகளிடம் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. இந்த நிலையிலும் பொது மக்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட விலையில் எண்ணெய் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விலையை கட்டுக்குள் வைக்கவும் பணியாற்றி வருகிறோம். அத்தியாவசிய பொருட்களான எண்ணெய், பருப்பு இருப்பை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சந்தையில் பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை பதுக்குபவர்களை மாநில அரசுகள் கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து