முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய குழு அமைப்பு : தமிழக அரசு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2021-11-02

Source: provided

சென்னை : ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 

தமிழக பொது விநியாகத் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு, விரல் ரேகை சரிபார்ப்பு தொழில்நுட்பம் மூலம் கார்டுதாரர்களின் விவரம் சரிபார்க்கப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு அனைத்து மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்து தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  ரேசன் கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து