முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

திங்கட்கிழமை, 2 மே 2022      சினிமா
Vidharth 2022 05 02

Source: provided

மலையாளத்தில் 2019 ம் ஆண்டு ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தின் ரீமேக் தான் ‘பயணிகள் கவனிக்கவும்’ படம்.இப்படத்தில் விதார்த், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சக்திவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ‘ஆஹா’ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது.விதார்த் மற்றும் லட்சுமி காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்று திறனாளிகளாக உள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என மிடில் கிளாஸ் வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம் துபாயில் வேலை பார்க்கும் கருணாகரன் திருமணத்துக்காக சென்னை வருகிறார். அப்போது மெட்ரோ ரயிலில் விதார்த் தூங்குவதை குடிபோதையில் தூங்குகிறார் என்று நினைத்து கருணாகரன் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்கில் பதிவிட அது வைரல் ஆகி விடுகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விதார்த் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவதற்கு சட்டத்தின் உதவியை நாடுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.வாய் பேச முடியாத மாற்று திறனாளியாக நடித்திருக்கும் விதார்த் நடிப்பில் அசத்துகிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் லஷ்மி ப்ரியாவும் நன்றாக நடித்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான தகவல்களால் எப்படி பிறருக்கு அவப்பெயரை உண்டாக்குகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சக்திவேல். திரைக்கதை மெதுவாக சென்றாலும் படம் சொல்ல வரும் செய்தி எல்லாவற்றையும் ரசிக்க வைக்கிறது. பாண்டி குமார் ஒளிப்பதிவும் ஷாம்நாத் நாக்கின் இசையும் படத்துக்கு வலு சேர்க்கிறது. மொத்தத்தில் ‘பயணிகள் கவனிக்கவும்’ – அனைவரும் கவனிக்க மற்றும் பார்க்க வேண்டிய படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!