முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புடினுக்கு புற்று நோய் அறுவை சிகிச்சை: ஆட்சி அதிகாரம் கைமாறுவதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      உலகம்
Putin 2022 02 26

Source: provided

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்றும், இதனால் ஆட்சி அதிகாரம் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான நிகோலாய் பட்ருஷேவ்விடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்படும் என்றும் அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கின்றன. 

முன்னதாக புடினுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக நியூயார்க் போஸ்ட் தகவல் தெரிவித்திருந்தது.  இதனிடையே புடினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால், குறுகிய காலத்திற்கு அவரின் ஆட்சி செயலிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சமீப காலங்களில் புடினின், நோய்வாய்ந்த தோற்றம் மற்றும் பொது இடங்களில் அசாதாரணமான பதற்றமான நடத்தை பற்றி குறிப்பிடுகையில், ரஷ்ய அதிபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பார்கின்சன் நோய் உட்பட பல கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவியதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. 

மேலும் பட்ருஷேவ் தனது ஒரே நம்பகமான கூட்டாளியாகவும் அரசாங்கத்தில் நண்பராகவும் இருப்பதாக புடின் கருதுகிறார் என்பதை நாங்கள் அறிவோம். கூடுதலாக, அவரது உடல்நிலை மோசமடைந்தால், நாட்டின் உண்மையான கட்டுப்பாடு தற்காலிகமாக பட்ருஷேவின் கைகளுக்குச் செல்லும் என்று அதிபர் உறுதியளித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து