முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மக்களுக்கு உதவிட தி.மு.க. எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறார்கள்

வியாழக்கிழமை, 5 மே 2022      தமிழகம்
5 Ram 11

Source: provided

சென்னை:இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, தி.மு.க சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். 

இத்துடன், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 3-ம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து; தி.மு.கவின் பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை "முதலமைச்சர் பொது நிவாரண நிதி"க்கு வழங்கிடுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து