முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ச்சகர்கள் - பணியாளர்களுக்கு உதவி தொகை: திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சனிக்கிழமை, 7 மே 2022      தமிழகம்
CM-4 2022 05 07

Source: provided

சென்னை : இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக கொரோனா தொற்று காலத்தில் திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள். பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில் உதவி தொகை ரூ.4,000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் தொடங்கப்பட்டு 46 திருக்கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் கலைஞர் தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அன்னைத் தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 14 இறைவன் போற்றி பாடல் நூல்கள் வெளியிடப்பட்டன.

சரித்திரம் போற்றும் சமத்துவ திட்டம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட 24 அர்ச்சகார்களுக்கும், பட்டாச்சாரியர்கள், ஒதுவார்கள். பூசாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு திருக்கோயில்கள் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கும். கருணை அடிப்படையில் 12 நபர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சரால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் வளமாக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து