முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன எல்லை பகுதிகளில் சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் : மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      இந்தியா
Rajnath 2022 05 08

Source: provided

புதுடெல்லி : சீன எல்லைக்கு அருகே பணிகளை விரைவுபடுத்துமாறு எல்லைச் சாலை அமைப்பிடம் மத்திய பாதுகாப்புத்துறை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தினார். 

நேற்று நடைபெற்ற 63-வது எழுச்சி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கூறியதாவது:- 

பல்வேறு இடங்களுக்கு விரைவாகச் சென்று சேரும் வகையில் மலைப் பகுதிகளில் கட்டுமானத் துறையில் சீனா தனது திறமையை அதிகரித்து வருகிறது. எல்லைச் சாலைகள் அமைப்பிடம் எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதற்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் அதன் திறனை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

2022-23 நிதியாண்டில் பி.ஆர்.ஓவின் மூலதன பட்ஜெட் 40 சதவீதம் அதிகரித்து ரூ.3,500 கோடியாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பகுதிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு உணர்வை இது காட்டுகிறது.

எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணப்படி, வலுவான, பாதுகாப்பான மற்றும் தன்னம்பிக்கையான 'புதிய இந்தியாவை' உருவாக்குவதற்கான, அரசாங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.சர்வதேச அளவில் நாட்டின் முன்னேற்றத்திற்கு வடகிழக்கு பகுதிகளின் வளர்ச்சி முக்கியமானது.

வடகிழக்கு பகுதி இந்தியாவை தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கிறது.பி.ஆர்.ஓ இன்று பல்வேறு மாநிலங்களில் 18 திட்டங்களுடன் ஒரு துடிப்பான அமைப்பாக மாறியுள்ளது. 60,000 கிலோமீட்டர் சாலைகள், 840 பாலங்கள், நான்கு சுரங்கப்பாதைகள் மற்றும் 19 விமானநிலையங்களை பாதகமான காலநிலை மற்றும் புவியியல் நிலைமைகளின் கீழ் இந்தியாவின் எல்லைகளிலும் நட்புறவில் உள்ள வெளி நாடுகளிலும் கட்டியுள்ளது.

2021-22 ஆம் ஆண்டில், மொத்தம் 102 உள்கட்டமைப்பு திட்டங்கள் - 87 பாலங்கள் மற்றும் 15 சாலைகள் எல்லைச் சாலை அமைப்பால் கட்டி முடிக்கப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து