முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமராவதி, ஆழியாறு அணைகளில் இருந்து நாளை முதல் நீர் திறக்க அரசு உத்தரவு

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : அமராவதி, ஆழியாறு அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம்,   ஆழியாறு பழைய ஐந்து  வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு  முதல் போக பாசனத்திற்கு  (நாளை) 16.05.2022 முதல் 15.10.2022 முடிய தொடர்ந்து 152 நாட்களுக்கு   ஆழியாறு அணையிலிருந்து 1205 மில்லியன்   கன அடிக்கு  மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.  இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், ஆணை மலை வட்டத்திலுள்ள   6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அவர் விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், 

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை பழைய பாசனத்திற்குட்பட்ட முதல் எட்டு பழைய இராஜ வாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு)  பாசனப் பகுதிகளுக்கு (நாளை) 16.05.2022 முதல் 28.09.2022 வரை 135 நாட்களில் 80 நாட்கள் தண்ணீர் திறப்பு 55  நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில் முதல் போக பாசனத்திற்காக அமராவதி அணையிலிருந்து 2074.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடஅரசு ஆணையிட்டுள்ளது. 

இதனால் திருப்பூர் மாவட்டத்தில்  7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து