முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோதுமை ஏற்றுமதிக்கான தடையை இந்தியா மறு பரிசீலனை செய்யும் : அமெரிக்கா நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      உலகம்
USA 2022-05-17

Source: provided

வாஷிங்டன் :  கோதுமை ஏற்றமதிக்கு விதிக்கப்பட்ட  தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில், சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் கோதுமைக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதன் எதிரொலியாக, சர்வதேச அளவில் கோதுமையின் விலையும் உயர்ந்துள்ளது.

உள்நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும், கோதுமை ஏற்றுமதிக்கு உடனடி தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அதிருப்தி தெரிவித்திருந்தன.

இந்நிலையில், ஐ.நா.,வுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி தாமஸ் கிரீன்பீல்ட், சர்வதேச உணவு பாதுகாப்பு தொடர்பாக நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கூடாது என உலக நாடுகளை அறிவுறுத்தி வருகிறேம். ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தால், அது உணவு பற்றாக்குறையை உருவாக்கி விடும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் இந்தியாவும் கலந்து கொண்டது. மற்ற நாடுகளின் கவலையை இந்தியா கேட்டுள்ளது. கோதுமை ஏற்றுமதி குறித்த தனது நிலையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!