முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் 2 தேர்வு மே 21-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
TNPSC 2022-05-17

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு வரும் மே 21-ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு குறித்து அதன் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு திட்டமிட்டப்படி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வின்போது காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டும்.  9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48 பேரும், தமிழ் வழியில் படித்தவர்கள் 79,942 பேரும்  விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதவுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5,624 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். மேலும், தேர்வு நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 குழுக்கள், 333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பணியிடத்திற்கு 10 பேர் என்ற அளவில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எதிர்காலத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து