முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ விசாரணை அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை அறிக்கை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், கடந்த 2018 மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த 3 ஆண்டுகளில் 36 கட்டங்களாக நடத்திய விசாரணையில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 1,048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதியப்பட்டது.   

இந்த ஆணையத்தின் கடைசி கட்ட விசாரணையில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதல்வர்  மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர்  மு.க.ஸ்டாலினிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து