முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுக்கு போர் விமானங்கள் வாங்கி கொடுத்த பாக். தொழிலதிபர்

வியாழக்கிழமை, 19 மே 2022      உலகம்
Mohammad-2022-05-19

பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது சஹூர், தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் உக்ரைனுக்கு இரண்டு போர் விமானங்களை வாங்கி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது சஹூர், பிரிட்டனில் தொழிலதிபராக இருக்கிறார். பாகிஸ்தான் வம்சாவளி நபரான இவர் உக்ரைனில் வசித்து வந்தவர். அங்கு அவர் உக்ரேனிய செய்தித்தாளான கீவ் போஸ்ட்-ன் முன்னாள் உரிமையாளராக இருந்தார். உக்ரைன் போரில் சிக்கிக் கொண்ட பலரை பத்திரமாக வெளியேற்ற உதவியவர். உக்ரைன் பாடகியான கமாலியாவின் கணவர். இப்படி பல்வேறு விதங்களில் உக்ரைனுடன் நெருங்கிய உறவை கொண்டிருக்கும் முகமது சஹூர், சமீபத்தில் தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் அந்நாட்டுக்கு இரண்டு போர் விமானங்கள் வாங்கி கொடுத்துள்ளார். 

இதுதொடர்பாக நியூஸ்வீக் இதழ் விரிவான செய்தி வெளியிட்டிருக்கிறது. அவருடைய மனைவியும் உக்ரைன் பாடகியான கமாலியா இதனை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவரது மனைவி கமாலியா சஹூர்,  மார்னிங் வித் உக்ரைன் எனும் நிகழ்ச்சியில் பேசும் போது, இந்த தகவலை வெளியிடுவதற்கு என் கணவர் எனக்கு அனுமதி வழங்கியிருக்கிறார். பொதுவாகவே அவரும் அவரது நண்பர்களும் தங்கள் செயல்பாடுகளை வெளியில் தெரிவிப்பதில்லை. அவர்கள் இரண்டு போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறார்கள் என்று கூறினார். 

உக்ரைன் போரில் சிக்கித் தவித்த பலர், வெளிநாடுகளில் அடைக்கலம் புகுவதற்கு முகமது சஹூர் பெரிய அளவில் உதவியதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரிடமிருந்து நிதி திரட்டி, பிரிட்டனுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பலரை அவர் அனுப்பி வைத்திருக்கிறார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்குத் துணை நிற்க உலக மக்களிடம் ஆதரவு திரட்டுவதிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து