முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி மாமல்லபுரத்தில் கூடுதல் அரங்கம் பணிகள் தீவிரம்

வியாழக்கிழமை, 19 மே 2022      விளையாட்டு
19 Ram 55

Source: provided

சென்னை:‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிற்கு மாமல்லபுரத்தில் கூடுதல் அரங்கம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தேர்வு செய்யப்பட்ட அரங்கத்தில் இந்த வசதிகள் இல்லாததால், அருகே கூடுதலாக 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மற்றொரு அரங்கம் அமைக்கப்படுகிறது.

ஜூலை 28 முதல்... 

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள “போர் பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ந் தேதி வரை 44வது சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் 150 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்கிறார்கள். விளையாட்டு அரங்கம் அமைக்க 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடம் மற்றும் மின் ஒளி விளக்குகள் அமைக்க 2,000 கி.வா, மின்சாரமும் தேவைப்படுகிறது.

மற்றொரு அரங்கம்... 

தற்போது தேர்வு செய்யப்பட்ட அரங்கத்தில் இந்த வசதிகள் இல்லாததால், அருகே கூடுதலாக 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மற்றொரு அரங்கம் அமைக்க அரசால் உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து “போர் பாய்ண்ட்ஸ்” வாகன நிறுத்தம் பகுதியை அரங்கமாக மாற்றும் பணி துவங்கியது. அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன. புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கும் பணிகளையும் மின் வாரியத்தினர் துவங்கி உள்ளனர். போட்டி ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள, தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் தலைமை நிர்வாக இயக்குனர் சங்கர் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து