முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகா அணைகளிலிருந்து கூடுதல் நீர் திறப்பு: திருச்சி உள்ளிட்ட 9 காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      தமிழகம்
Cauvery 2022-05-20

Source: provided

சென்னை : கர்நாடகா அணைகளிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் காவிரி கரையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு டெல்டா மாவட்ட கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர் மழை காரணமாக கர்நாடகவில் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கர்நாடகாவில் அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கலாம் என்பதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை நாகை என 9 மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கேரளா, கர்நாடகாவில் கனமழையால் இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 46,000 கன அடியாக உயரலாம் என கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!