எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தலைநகர் தில்லியிலிருந்து 222 பயணிகளுடன் இண்டிகோ விமானம் மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. அப்போது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் தகவல் கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து காலை 9.17 மணியளவில் விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தரையிறக்கப்பட்ட விமானம் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு வெடிகுண்டு அகற்றும் குழுவினர், விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
முதற்கட்ட சோதனையின் போது, பாதுகாப்புப் படையினர் ஒரு டிஷ்யூ பேப்பரில் கையால் எழுதப்பட்ட குறிப்பைக் கண்டெடுத்தனர். அதில் விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என்று எழுதப்பட்டிருந்ததாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


