முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும் பாக்.: இந்தியாவுக்கு அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      உலகம்
Pak 2022-05-20

இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் தனது ராணுவத்துக்கு பயிற்சியை வழங்கி வருகிறது என்றும், இந்தியாவுக்கு எதிராக அணு ஆயதங்களை நவீனப்படுத்தி வருகிறது என்றும் அமெரிக்க உளவுத்துறை இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு கூட்டத்தில், அமெரிக்கா உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உறவு மோசமாகியிருக்கிறது. இந்தியாவின் அணு ஆயுதங்கள், ராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுகிறது.  இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் தனது ராணுவத்துக்கு பயிற்சியை வழங்கி வருகிறது. மேலும் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும், அதிகரிக்கும் நடவடிக்கைகாளில் ஈடுப்பட்டுள்ளது என்று அமெரிக்க உளவுதுறை எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!