முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்ரம் இசை வெளியீட்டு விழா

சனிக்கிழமை, 21 மே 2022      சினிமா
Vikram 2022-05-21

Source: provided

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ‘விக்ரம்’. இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காயத்ரி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார். இசை அனிருத், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுத்த மாதம் 3-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. விழாவில் நாயகன் கமல் பேசுகையில், அனைவரும் மொழி குறித்து பேசுகின்றனர். இந்தியாவின் சிறப்பே பன்முகம்தான். எனக்கு தமிழும் சரி, இந்தியும் சரி, சுமாராகத்தான் வரும். எந்த மொழியையும் ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை. நாம் விரும்புகிற மொழியை படிப்போம், ஆனால், தாய்மொழியை விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் எதிர்த்து போராடுவோம் என்றார். டிஜிட்டல் வந்ததால் தியேட்டர் கலாச்சாரம் ஒழிந்துவிடும் என்கின்றனர். ஓடிடி வருவதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாது. வீட்டு காலண்டரில் வெங்கடாசலபதி படம் வைத்திருப்பதால், திருப்பதியில் கூட்டம் குறைந்து விடாது, படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுவது பற்றி பலரும் கேட்டார்கள். ஸ்டாலின் எனக்கு அரசியல் தாண்டிய நண்பர். கலைஞரிடம் ஆரம்பித்த உறவு, அவரது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது. அனிருத் இசையில் 'பத்தல பத்தல' என்ற பாடலை மூன்று மொழிகளிலும் நானே பாடி இருக்கிறேன். இந்த படம் வெல்லும் என அனைவரும் நம்பிக்கையாக சொல்வதற்கு காரணம் வலுவான அணி அமைந்திருக்கிறது என்று கூறினார் கமல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து