முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்

திங்கட்கிழமை, 23 மே 2022      விளையாட்டு
Ci-kam 2022-05-22

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் கூண்டுக்குள் உள்ள சிங்கத்தை, பராமரிப்பாளர் தொட முயன்றார். சிங்கம் அவரைப்பார்த்து உருமியப்படி இருந்தது.  இருப்பினும் அவர் தொடர்ந்து சிங்கத்தை தொட்டு விளையாடியபடி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கம் அவரது விரலை கடித்து  குதறியது. 15 பேர் இந்த சம்பவத்தை நின்று வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவத்தால் பராமரிப்பாளரின் விரல் முழுவதும்  துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பராமரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!