முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போா்க் குற்றம்: ரஷ்ய வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உக்ரைன் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      உலகம்
Ukrainian-Court 2022-05-24

Source: provided

கீவ் : உக்ரைனில் போா்க்குற்றத்துக்காக ரஷ்ய வீரா் ஒருவருக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போா் தொடுத்தது. இந்தப் போரின்போது பொதுமக்களை சுட்டுக் கொல்வது, குடியிருப்புகள், மருத்துவமனைகளைக் குறிவைத்து குண்டு வீசுவது என பல்வேறு போா்க் குற்றங்களில் ரஷ்யா ஈடுபடுவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், போரின் ஆரம்ப நாள்களில் சுமி பிராந்தியத்தில் உக்ரைன் குடிமகன் ஒருவரை ரஷ்ய வீரா் வதீம் ஷிஷிமரின் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு உக்ரைன் ராணுவத்தால் அவா் கைது செய்யப்பட்டார். 

உள்ளூா் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, அந்த நபரை சுட்டுக் கொன்றதை ரஷ்ய வீரா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!