முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 25 மே 2022      தமிழகம்
CM-1 2022-05-25

Source: provided

சென்னை : இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும். அடிப்படை கல்வி மட்டுமல்ல உயர்கல்வியும் தந்தாக வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சென்னை ராணிமேரி கல்லூரியில் மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். பின்னர் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்வும் இணைந்து நடக்கும் சிறப்பு விழா இது. உணர்ச்சிமிக்க மாணவிகள் புடைசூழ இந்த விழா நடைபெற்று கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் இணைந்து பணியாற்றும் பண்பு தொடர வேண்டும். மற்ற அமைச்சர்கள் இதனை பின்பற்ற வேண்டும். இந்தியாவிலேயே முதல்முதலாக துவங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இளைஞர்கள் என்றால் மாணவர்கள் மட்டுமல்ல, மாணவிகளும் தான். 18 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடு இந்தியா.

இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும், அடிப்படை கல்வி மட்டுமல்ல உயர்கல்வியும் தந்தாக வேண்டும். உயர்கல்விக்கு பிறகு வேலை, அதற்கேற்ற ஊதியம் ஆகியவற்றை தந்தாக வேண்டும். இந்த உழைப்பு சக்கரத்தை சரியாக தரும் அரசு தான் தி.மு.க. அரசு. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்று 2010-ல் தி.மு.க. அரசு உருவாக்கியது. அன்று தேசிய அளவில் இத்தகைய திட்டம் செயல்பாட்டில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து