முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம்

சனிக்கிழமை, 28 மே 2022      சினிமா
Bothanur-Post-Office-Review

Source: provided

இந்தியாவின் முதல் தபால் அலுவலகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான்  போத்தனூர் தபால் நிலையம். ‘தபால் நிலைய கொள்ளை’ என்பது தான் படத்தின் கதைக்கரு. ஏற்கனவே மூன்று பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் தற்போது ரிலீசாகியுள்ளது. 1990 கால கட்டங்களில் நடக்கும் கதை. ஹீரோ ப்ரவீன் வங்கியின் லோன் கேட்டு பணத்துக்காக அலைகிறார். மறுபுறம் போஸ்ட் ஆபிஸ் பறி கொடுத்த பணத்தை தேடி பிரவீன் அப்பா அலைகிறார். கடைசியில் பணம் யாருக்கு கிடைத்தது என்பதே மீதிக்கதை . படத்தின் நாயகன் பிரவீன் படத்தை இயக்கியிருக்கிறார். இவரின் தந்தை அஞ்சலகத்தில் காசாளராக இருந்தவர். அப்பாவின் அனுபவத்தை வைத்து போத்தனூர் தபால் நிலையம் என்ற படம் உருவாகி இருக்கிறது. Passion Studios தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் இயக்குனர் பிரவீனே நாயகன் என்பதாலும் இவரே கலை இயக்குனர் என்பதாலும் படத்தை செதுக்கியிருக்கிறார். அவர் யதார்த்த நடிகராய் பளிச்சிடுகிறார். அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். மே 27, அன்று ஆஹா ஓடிடி யில் போத்தனூர் தபால் நிலையம் வெளியாகியி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து