முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணிகளை தடுத்த விவகாரம்: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் - டி.ஜி.சி.ஏ

சனிக்கிழமை, 28 மே 2022      இந்தியா
Airport 2021 12 31

மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்த சம்பவத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலையத்தில், இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள், ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்த சம்பவம் கண்டனத்திற்கு உள்ளானது. ராஞ்சி விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இண்டிகோ விமான நிறுவனம் அதன் பயணிகளை தகாத முறையில் கையாண்டது எனத்தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி குழந்தையை இண்டிகோ விமான நிறுவனம் கையாண்டது கண்ணியக்குறைவானது எனவும் நிலமையை மோசமாக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!