முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதீனம் என்றால் பதுங்கி கிடக்க முடியாது: துறவியர் மாநாட்டில் மதுரை ஆதீனம் பேச்சு

சனிக்கிழமை, 4 ஜூன் 2022      ஆன்மிகம்
Madurai-Aadeenam 2022 06 04

Source: provided

மதுரை : ஆதீனம் என்றால் பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ரா அடிக்க முடியாது என மதுரையில் துவங்கிய துறவியர் மாநாட்டில், மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஒரு அங்கமான, அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில், மதுரை பரவை ஆகாஷ் கிளப் மஹாலில், இரண்டு நாள் துறவியர் மாநாடு நேற்று துவங்குகியது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சுதாகர் துவக்க உரையாற்றினார். விஷ்வ இந்து பரிஷத் அகில உலக இணை பொதுச்செயலர் தாணுமலையான் தலைமை உரையாற்றினார்

இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசியதாவது:- கோயிலை தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என போராட்டம் நடத்தினோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதி பூச மறுக்கின்றனர். கோயில் சொத்துகளுக்கு குத்தகை, வாடகை பணம் முறையாக வருவதில்லை.

இதைபற்றி கேட்டால், பேசினால் இடையூறு செய்கிறீர்களா என கேட்கின்றனர். ஆதீனம் என்றால், பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ரா அடிக்க முடியாது. இந்துக்களுக்கு ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும். இதையெல்லாம் பேசியதனால், பிரதமரிடம் நான் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். 

பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் பேசும் போது, மதமாற்றத்தை தடுக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கம் ஏற்படுத்துவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். தனித்து இயங்கும் வாரியத்தின் கீழ் கோயிலை கொண்டு வர வேண்டும் என்றார். 

இன்று 5-ம் தேதி மாலை 5 மணியளவில் பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில், விஷ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து