முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் 5 பெண்கள் உட்பட 21 அமைச்சர்கள் பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2022      இந்தியா
Naveen-Patnaik 2022-06-04

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசாவில் 5 பெண்கள் உள்பட மொத்தம் 21 பேர் நேற்று அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

2024-ல் வரவுள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலுக்காக கட்சியைப் பலப்படுத்த முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் ராஜிநாமா செய்தது. இதைத் தொடர்ந்து, நேற்று புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. இந்த அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

புவனேஸ்வரில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மொத்தம் பதவியேற்றுக் கொண்ட 21 அமைச்சர்களில் 13 பேர் கேபினட் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். 5 பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டதில், 3 பேர் கேபினட் அமைச்சர்கள். கடந்த முறை கேபினட் அந்தஸ்தில் 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது.   

நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி கடந்த மே மாதம்  29-ம் தேதியுடன், 3 ஆண்டுகால ஆட்சியைக் கடந்து 4-ம் ஆண்டு ஆட்சியில் அடியெடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து