முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயோன் டிரெய்லர் வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      சினிமா
Mayon-trailer 2022-06-06

Source: provided

Double Meaning Production தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் N.கிஷோர் இயக்கத்தில், சிபிராஜ் நடித்துள்ள படம்  “மாயோன்”. 

சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டையைக் கருவைக் கொண்டு பரபரப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, ஆடியோ விளக்கத்துடன்  பிரத்யேகமாக ஒருவாக்கப்பட்ட டிரெய்லர்  வெளியிடப்பட்டது. இவ்விழாவில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் பேசியதாவது, சைக்கோ படத்தின் போது பார்வையற்றோருக்கு திரையிட்டபோது அவர்களின் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி என் மனதிற்கு மிகப்பெரும் சந்தோசத்தை தந்தது. அப்போது என் எல்லா படத்தையும் பார்வையற்றோர் ரசிக்கும்படி வெளியிட வேண்டும் என முடிவு செய்தோம். இப்படம் நீங்கள் எதிர்பார்க்காத புதிய அனுபவத்தை தரும் என்றார். பின்னர் நடிகர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது… நான் இந்தப்படத்தில் ஒரு நடிகன் தான். இது கடவுள் படம் என நினைத்து விட வேண்டாம். இதில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது என்றார். அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ஜூன் 24 ஆம் தேதி வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து