முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வரம்பு அதிகரிப்பு: 24 ரெயில் டிக்கெட்கள் வரை இனி முன்பதிவு செய்யலாம் : இந்தியன் ரெயில்வே முடிவு

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      இந்தியா
Train 2022 06 03

Source: provided

புதுடெல்லி : ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 24 ஆகவும் அதிகரிக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வரம்பு அதிகரிக்க உள்ளது. 

ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் இணைக்கப்படாத பயனர் கணக்கு மூலமாக ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளும், ஆதார் இணைக்கப்பட்ட பயனர் கணக்கு மூலமாக 12 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்வதற்கான உச்ச வரம்பாக இருந்தது. 

இந்நிலையில், பயணிகளுக்கு வசதியாக இந்த வரம்பு அதிகரிப்பட இருப்பதாக இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஆதார் இணைக்கப்படாத பயனர் கணக்கு மூலமாக ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 12 ஆகவும் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர் கணக்கு மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 24 ஆகவும் அதிகரிக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது. 

முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் உள்ள பயணிகளில் ஒருவர் ஆதார் மூலம் சரிபார்க்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து