முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு 2-ம் கட்டமாக நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது தமிழக அரசு: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2022      தமிழகம்
tamilnadu-govt-30-06-20212

இலங்கைக்கு 2-ம் கட்டமாக நிவாரணப் பொருட்களை தமிழக அரசு அனுப்ப உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

அதன்படி, தமிழக அரசு சார்பில் கடந்த மாதம் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கைக்கு 2ம் கட்டமாக அடுத்த வாரம் தூத்துக்குடியில் இருந்து உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து