முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா உயிர்ப் பொருளாதாரம் 8 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

வியாழக்கிழமை, 9 ஜூன் 2022      இந்தியா
PM-Modi-2022-06-09

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா உயிர்ப் பொருளாதாரம் 8 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாக, உயிரி தொழில்நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உயிரி தொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கான கண்காட்சியை பிரதமர் மோடி புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

உயிரி தொழில்நுட்ப கண்காட்சி ஜூன் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. பயோடெக்னாலஜி மற்றும் பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சில் (BIRAC) துறையால் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பயோ-இன்குபேட்டர்கள், உற்பத்தியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள் போன்றவர்களை இணைக்கும் தளமாக இந்த கண்காட்சி செயல்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கண்காட்சியில் சுமார் 300 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரம், மரபியல், உயிரியல் மருந்து, விவசாயம், தொழில்துறை உயிரி தொழில்நுட்பம், கழிவு-மதிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயிரி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. 

கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது., இந்தியாவின் உயிர் பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது பயோடெக் உலகளாவிய சுற்றுசூழல் அமைப்பில் முதல் 10 நாடுகளில் இடம்பெற இந்தியாவுக்கு வெகு தொலைவில் இல்லை. பயோடெக் துறையில் இந்தியா வாய்ப்புகளின் பூமியாக கருதப்படுகிறது.

பலதரப்பட்ட மக்கள் தொகை, மாறுபட்ட தட்பவெப்ப மண்டலங்கள், திறமையான மனித மூலதன குலம், எளிதாக வணிகம் செய்வதற்கான முயற்சிகள் மற்றும் பயோ பொருட்களின் தேவை ஆகியவை இதற்கு காரணமாக அமைகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 60 வெவ்வேறு தொழில்களில், நாட்டில் புத்தாக்க நிறுவனங்களின் வளர்ச்சி எண்ணிக்கை சில நூறுகளில் இருந்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து