முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய உயர்மட்ட குழு: தமிழக அரசாணை வெளியீடு

வியாழக்கிழமை, 9 ஜூன் 2022      தமிழகம்
tamilnadu-govt-30-06-20212

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய உயர்மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது., மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க தலைமைச் செயலரின் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. மேற்படி தலைமைச் செயலரின் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் மேலும் மூன்று உறுப்பினர்களை சேர்த்து ஆணையிடப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாசு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகிய உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவானது, அனைத்து அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதை கண்காணிக்கும்.

மாற்றுத்திறனாளிகலுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு நிரப்பப்படாத பட்சத்தில், அப்பணியிடங்கள் அடுத்த ஆண்டிற்கு முறையாக முன்கொண்டு வரப்படுகின்றனவா என்பதனை கண்காணிக்கும். மாற்றுத்திறனாலிகள் பணிபுரிய உகந்த பதவியிடங்கள் கண்டறியப்படுவதையும், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்படுவதையும் கண்காணிக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து