முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுமண தம்பதிகள் நயன்தாரா-விக்னேஷ் ஜோடி திருப்பதியில் சாமி தரிசனம்

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      சினிமா
Nayantara-Vignesh 2022 06 1

Source: provided

ஆந்திரா : திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதியான நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்க ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த நயன்தாரா தம்பதி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று சென்றிருந்தனர். அவர்கள் பக்தர்களுக்கான சுபதம் நுழைவு வாயிலில் ஏழுமலையான் கோயிலுக்குள் சென்றனர்.

கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்ற பின்னர் ஏழுமலையானை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி தரிசனம் செய்தனர். இவர்களின் திருமணம் மாமல்லபுரம் கடற்கரை சாலையில் உள்ள சொகுசு ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் பிரபல திரை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், ஹாருக்கான், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து